திருக்கோயில். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் தண்டி உளுந்தூர்பேட்டைக்கு முன் மடப்பட்டு என்ற ஊரில் இடப்புறம் பிரியும் பண்ருட்டி சாலையில் 2 கி.மீ செல்ல வேண்டும். இக்கோயிலிலுள்ள சண்டேஸ்வரர் வரலாற்றுச் சிற்பங்கள் கண்டு கழிக்கத் தக்கது. சுந்தரர் பாடல் பெற்றது.
1. திருக்கச்சி அத்திகிரி. (காஞ்சிபுரம்).
(43 வது திவ்யதேசம்).
அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில். (காஞ்சிபுரம்)
பெருமாள்: ஸ்ரீ வரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான்: மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார்: பெருந்தேவி தாயார் (தனிக்கோயில்). தீர்த்தம்: வேகவதி (நதி), அனந்த சரஸ், சேஷ தீர்த்தம். வராஹ தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம், விமானம்: புண்யகோடி விமானம்.
இங்குள்ள திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் (அத்திமரத்தாலான பெருமாள்) சிலையை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து 10 தினங்களுக்கு பூஜை செய்வர். அப்போதுமட்டும் தரிசனம் கிடைக்கும்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்,பேயாழ்வார். வாரணகிரி, அத்திகிரி என்ற மாடி போன்ற மலைகளாலான இத்தலத்தில் முதல் தளத்தில் நரசிமர் (அழகிய சிங்கர்) அமர்ந்த திருக்கோலத்திலும், மேல் தளத்தில் வரதராஜப் பெருமாளும் சேவை சாதிக்கின்றனர். சித்திரா பௌர்ணமி கழிந்து 15 நாட்களுக்கு, சூரியன் மறையும்போது, சூரியகிரணங்கள், சுவாமியின் திருமுகத்தில் விழுமாறு சந்நிதி வடிவமைக்கப் பட்டுள்ளது.
இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் தூண் சிற்பங்கள் மிக அற்புதமானவை. அவற்றை கீழே கண்டு மகிழலாம்:
2. அட்டபுயக்கரம். (காஞ்சி)
(44 வது திவ்யதேசம்)
வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து 1 1/2. கி.மீ.
பெருமாள்: ஆதிகேசவப்பெருமாள், கஜேந்திருவரதன், அஷ்ட புயக்கரத்தான். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார்: அலர்மேல்மங்கை, பத்மாஸனி, புஷ்பவல்லி. தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரணி. விமானம்: ககநாக்ருதி, சக்ராக்ருதி, வ்யோமாகர விமானம். எட்டுக்கரங்களுடன் பெருமாள் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே. மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், பேயாழ்வார்.
3. திருத்தண்கா (தூப்புல்,காஞ்சி)
(45.வது திவ்யதேசம்)
அட்டபுயக்கரத்திளிருந்து 1 கி.மீ. பெருமாள்: தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப் பிரகாசர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார்: மரகதவல்லி. தீர்த்தம்: சரஸ்வதி. விமானம்: ஸ்ரீ கரவிமானம். ஸ்ரீ சுவாமி தேசிகன் அவதாரப்பதி. மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார.
4. திடுவேளுக்கை. ( காஞ்சிபுரம்)
46 வது திவ்யதேசம்.
அட்டபுயக்கரத்திலிருந்து 1/2. கி.மீ.
பெருமாள்: அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன். மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். தாயார்: வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி. (தனிக்கோயில்). தீர்த்தம்: கனகஸரஸ், ஹெமசரஸ். விமானம்: கனக விமானம். மங்களாசாசனம்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார்.
5. திருநீரகம். (காஞ்சிபுரம்)
47 வது திவ்யதேசம்.
இத் திருத்தலம் எங்கிருந்தது என்று அறியமுடியவில்லை. உற்சவர் மட்டும் உலகளந்தான் (திருஊரகம்) கோவிலில் சேவை சாதிக்கிறார்.
மூலவர்: நீராகத்தான். (தற்போது இல்லை)
உற்சவர்: ஜகதீஸ்வரப் பெருமாள். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: நிலமங்கை வள்ளி.
விமானம்: ஜகதீஸ்வர விமானம்.
தீர்த்தம்: அக்ரூர தீர்த்தம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
திருஊரகத்தில் 16 கால் மண்டபத்தில் நீராகத்தான் சன்னதி உள்ளது.
6. திருப்பாடகம். (காஞ்சிபுரம்).
48 வது திவ்யதேசம்.
பாண்டவ தூதப் பெருமாள் கோயில் - பெரிய காஞ்சிபுரம்.
பெரிய காஞ்சியில் கங்கைகொண்டான் மண்டபத்தில் உள்ளது.
மூலவர்: பாண்டவதூதர். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்: ருக்மணி, சத்யபாமா.
விமானம்: பத்ர விமானம், வேத கோடி விமானம்.
தீர்த்தம்: மத்ஸய தீர்த்தம்.
மங்களாசாசனம்: திருமழிசையாழ்வார்.
மூலவர் 25 அடி உயர பிரம்மாண்டமான திருமேனி. சிறிய சன்னதி. பெரிய பெருமாள்.
7. திரு நிலாத்திங்கள் துண்டம். (காஞ்சிபுரம்).
49 வது திவ்யதேசம்.
இத் தலம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலினுள் உள்ளது.
மூலவர்: நிலாத்துண்டத்தான், சந்திரசூடப் பெருமாள். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: நேரோருவர் இல்லா வல்லி, நிலாத்திங்கள் துண்டத் தாயார்.
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி.
விமானம்: புருஷ ஷூக்த விமானம். (ஆர்யா விமானம்).
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
8. திருஊரகம். (காஞ்சிபுரம்).
50 வது திவ்யதேசம்.
உலகளந்த பெருமாள் திருக்கோயில்.
மூலவர்: உலகளந்த பெருமாள், திருவிக்ரமன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்: பெரகத்தான்.
தீர்த்தம்: நாக தீர்த்தம்.
விமானம்: ஸார ஸ்ரீகர விமானம்.
மங்களாசாசனம்: திருமழிசையாழ்வார்,திருமங்கையாழ்வார்.
உலகளந்த பெருமாள்,மிகப் பிரம்மாண்டமான நெடிதுயர்ந்த திருமேனி. இடது கரத்தில் இரண்டு விரலையும், வலது கரத்தில் ஒரு விரலையும், உயர்த்திக்காட்டி அமைந்துள்ள கோலம் வெகு அழகு.இங்குள்ள ஆதிசேடன் சன்னதி மிக விசேஷம்.
இத்திவ்ய தேசத்திற்குள்ளேயே நீரகம்,காரகம், கார்வண்ணம் ஆகிய மூன்று திவ்யதேசங்கள் அமைந்துள்ளன.
9. திருவேஹ்கா. (காஞ்சிபுரம்).
51 வது திவ்யதேசம்.
காஞ்சியில் அட்டபுயக்கர பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ளது.
மூலவர்: யாதொத்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமாள். மேற்கு நோக்கிய சயனத்திருக்கோலம்..
தாயார்: கோமளவல்லி நாச்சியார்.
தீர்த்தம்: பொய்கை புஷ்கரணி.
விமானம்: வேதாஸார விமானம்.
மங்களாசாசனம்: பேயாழ்வார், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்.
பொய்கையாழ்வார் அவதாரத்தலம்.
10.திருக்காரகம். (காஞ்சிபுரம்).
52 வது திவ்யதேசம்.
திரு உலகளந்த பெருமாள் கோயில் உள்ளேயே அமைந்துள்ளது.
மூலவர்: கருணாகரப் பெருமாள். வடக்கு நோக்கி ஆதிசேடன் மீது அமர்ந்த திருக்கோலம்.
தாயார்: பத்மாமணி நாச்சியார், ராமாமணி naassiyaar
தீர்த்தம்: அக்ராய தீர்த்தம்.
விமானம்: வாமன விமானம், ரம்ய விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
11 திருக்கார் வானம். (காஞ்சிபுரம்).
53 வது திவ்யதேசம்.
திரு உலகளந்த பெருமாள் கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது.
மூலவர்: கள்வர். வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: கமலவல்லி, தாமரையாள்.
தீர்த்தம்: கௌரி தீர்த்தம்,தராதர தீர்த்தம்.
விமானம்: புஷ்கல விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
12 . திருக்கள்வனூர். (காஞ்சிபுரம்).
54 வது திவ்யதேசம்.
அருள்மிகு காமாட்சி அம்மன் திருகோயில் குளத்தினருகே உள்ளது.
மூலவர்: ஆதிவராஹப்பெருமால், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: அஞ்சிலைவல்லி நாச்சியார்.
தீர்த்தம்: நித்ய புஷ்கரணி.
விமானம்: வாமன விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
13. திருப்பவள வண்ணம். (காஞ்சிபுரம்).
55 வது திவ்யதேசம்.
பெரிய காஞ்சிபுரத்தில், காலாண்டார் தெருவில் உள்ளது.
மூலவர்: பவள வண்ணர், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: பவளவல்லி, தனிக்கோயில்.
தீர்த்தம்: சக்ர தீர்த்தம்.
விமானம்: ப்ரவாள விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
எதிரே பச்சை வன்னனாதர் திருக்கோயில்.
14. திருப்பரமேச்சுர விண்ணகரம். (காஞ்சிபுரம்).
56 வது திவ்யதேசம்.
காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே 1/2. கி.மீ.
மூலவர்: பரமபதநாதன். மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்: வைகுந்த வல்லி.
தீர்த்தம்: ஜாம்மத தீர்த்தம்.
விமானம்: முகுந்த விமானம்,
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
இத் த்ஜலத்தின் கருவறை,அதைச்சுற்றியுள்ள பிரகாரம் (தூண்கள் உட்பட) ஒரே பாறையில் குடையப்பட்ட பல்லவர் பாணி குடவறைக்கோயில். பல்லவ மன்னன் பரமேச்வரவர்மனால் கட்டப்பட்ட இக் கோயிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளன.
15. திருப்புட்குழி.
57 வது திவ்யதேசம்.
சென்னை - வேலூர் சாலையில் பாலுசெட்டி சத்திரத்தின் அருகே உள்ள தலம்.
மூலவர்: விஜயராகவப் பெருமாள். நான்கு புஜங்களுடன் கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்: மரகதவல்லி. தனிக்கோயில்.
தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம்.
விமானம்: விஜயகோடி விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸமஸகாரம் செய்யும் பாவனையில் அமர்ந்த திருக்கோலம். இராமானுஜர் யாதவப் பிரகாசரிடம் அத்வைத பாடம் படித்த தலம்.
58. திருநின்றவூர்.
58 வது திவ்யதேசம்.
சென்னை - திருவள்ளூர் (பூந்தமல்லி வழி) சாலையில் உள்ளது.
மூலவர்: பக்தவத்சல பெருமாள், பத்தராவிப் பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: என்னைப்பெற்ற தாயார்,சுதாவல்லி.
தீர்த்தம்: வருண புஷ்கரணி.
விமானம்: உட்பல விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
திருமகள் வந்து தனித்து நின்ற இடம்- திருநின்றவூர்.
17. திருவள்ளூர். (திரு எவ்வுள்).
59 வது திவ்யதேசம்.
மூலவர்: வீரராகவப் பெருமாள்,புஜங்கசயனம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.
உற்சவர்: வீரராகவப் பெருமாள்.
தாயார்: கனகவல்லி (வஸுமதி தேவி)
தீர்த்தம்: ஹ்ருத்தபாப நாசினி.
விமானம்: விஜயகோடி விமானம்.
மங்களாசாசனம்: திருமழிசையாழ்வார்,திருமங்கையாழ்வார்.
இத் தளத்தில் செய்யும் புண்ணியம் பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால், இத் தளத்திற்கு புன்னியாவார்த்த ஷேத்திரம் என்று பெயர்.
19. திருவல்லிக்கேணி. (சென்னை)
60 வது திவ்யதேசம்.
மூலவர்: வேங்கடகிருஷ்ணன். ருக்மணி பிராட்டி மற்றும் பலராமன், ஸாத்யாகி, அநிருத்தன், பிரத்யும்னன் ஆகியோரோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்: பார்த்தசாரதி.
தாயார்: வேதவல்லி.
தீர்த்தம்:: கைரவினி (அல்லிக்கேணி).
விமானம்: ஆனந்த விமானம், பிரணவ விமானம்,புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம்.
மங்களாசாசனம்: பேயாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்.
ஐந்து மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளியுள்ள தலம். வைனவத்தலங்க்களுள் சிறப்புற்ற, வேங்கடம்,அரங்கம், கச்சி என்ற முத்தலப் பெருமாள்களும் இங்கு கோயில் கொண்டிருப்பது விசேடம். பெரிய மீசையுடன் பெருமாளை இங்குமட்டுமே தரிசிக்கலாம்.
20. திருநீர்மலை.
61 வது திவ்யதேசம்.
சென்னை, பல்லாவரத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது.
இங்கு மலையடிவாரத்திலும்,,மலைமீதுமாக இரண்டு கோயில்கள் உள்ளன.
1) மலையடிவாரக்கோயில்:
மூலவர்: நீர்வண்ணன், நீலமுகில் வண்ணன்.கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: அணிமாமலர் மங்கை. தனிக்கோயில்.
மலைக்கோயில்:
மூலவர்: 1) சாந்த நரசிம்மன்.அமர்ந்த திருக்கோலம். 2) ரங்கநாதன். சயன திருக்கோலம். 3) திருவிக்ரமன்.நடந்த மற்றும் நின்ற திருக்கோலம்.
தீர்த்தம்: மணிகர்ணிகா தடாகம்,\, சீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி, ஸவர்ண புஷ்கரணி.
விமானம்: தொயகிரி விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்.
நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என்ற நான்கு திருக்கோல தரிசனம்.
பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின் வைகுண்டத்த்ற்கு திரும்பும் காட்சி இங்கு சேவையாகிறது:
அமர்ந்த நிலையில் நரசிம்மராக, நின்ற நிலையில் நீர்வண்ணராக, சயன நிலையில் ரெங்கநாதனாக, நடந்த நிலையில் உலகளந்த திரிவிக்ரமனாக தரிசிக்கிறோம்.
20. திருவிடவெந்தை. (திருவடந்தை).
62 வது திவ்யதேசம்.
சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில், கோவளத்திற்கு அடுத்து உள்ளது.
மூலவர்: லக்ஷ்மி வராகப்பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்: நித்ய கல்யாணப் பெருமாள்.
தாயார்: கோமளவல்லி நாச்சியார். தனிக் கோயில்.
தீர்த்தம்: வராஹ தீர்த்தம். கல்யாண தீர்த்தம்.
விமானம்: கல்யாண விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
நித்ய கல்யாணபுரி, வராஹபுரி என்பவை இத்தளத்தின் வேறு பெயர்கள். தினமும் ஒரு திருமணம் செய்துகொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள்.என்று பெயர். திருமண பிரார்த்தனைத் தலம்.
21) திருக்கடன் மலை. (மாமல்லபுரம்).
63 வது திவ்யதேசம்.
சென்னையிலிருந்து 55 கி.மீ தூரத்திலுள்ள இத் தலம் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
மூலவர்: ஸ்தல சயனப் பெருமாள். புஜங்க சயனம். கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
உற்சவர்: உலகுய்ய நின்றான்.
தாயார்: நிலமங்கைத் தாயார். தனிக்கோயில்.
தீர்த்தம்: புண்டரீக புஷ்கரணி, கருட நதி.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
பண்டைய பல்லவர் தலைநகரமாக விளங்கிய இத் தல சிர்ற்பங்கள் கண்டு மகிழத்
தக்கவை. கீழே........
22. சொலசிம்மபுரம் என்னும் திருக்கடிகை. (சோளிங்கர்)
64 வது திவ்யதேசம்.
அரக்கோணத்திலிருந்து 25 கி.மீ.
மூலவர்: யோக நரசிம்மர். (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர்: பக்த்தவத்ஸல பெருமாள். (தக்கான்).
தாயார்: அம்ருதவல்லி.
தீர்த்தம்: அம்ருத தீர்த்தம்,தக்கான் குளம், பாண்டவ தீர்த்தம்.
விமானம்: ஸிம்ஹ விமானம், கோஷ்டாக்ருதி விமானம், ஹேமகொடி விமானம்.
மங்களாசாசனம்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார்.
சுமார் 500 அடி உயரமுள்ள கட்ட்காசலம் என்னும் மலை மீது நரசிம்மரும்,அருகே சற்று சிறிய மலைமீது, ஸ்ரீ ஆஞ்சநேயரும் கோயில் கொண்டுள்ளனர். ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கிரருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகவே திருக்கடிகை என்றாயிற்று.
ஸ்ரீபெரும்புதூர்.
சிங்கப்பெருமாள் கோயில். சென்னை - செங்கல்பட்டு சாலையில் உள்ள தலம்.
பாடலாத்திரி நரசிம்மப் பெருமாள். (திரிநேத்திரதாரி)
நடுநாட்டுத் திவ்யதேசங்கள் (2)
1. திருவயிந்திபுரம்.
41 வது திவ்யதேசம்.



கடலூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள தலம்.
மூலவர்: தெய்வநாயகன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்: மூவராகிய ஒருவன். (தேவன்).
தாயார்: வைகுண்ட நாயகி, ஹேமாமபுஜ வல்லித் தாயார்.
விமானம்: சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
இக் கோயில் பெருமாளுக்கு, தாஸ ஸத்யன், அச்சுதன், ஸ்த்ரஜ்யோதிஷ், அனகஞ்சயோததிஷ், த்ரிமூர்த்தி என்றும் பெயர்களுண்டு. இப் பெருமான், பிரமனுக்கு அடையாளமான தாமரையையும், விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு,சக்கரங்களையும்,சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு திகழ்கிறார். ஹயக்ரீவப் பெருமாள் சந்நிதி இத் திருக்கோயிலின் எதிரே ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது.
2. திருக்கோவலூர்.
கடலூரிலிருந்து திருக்கோவலூர் சாலை பிரிகிறது.
மூலவர்: திருவ்ராமன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்: ஆயன்,ஆயனார்,கோவலன் (கோபாலன்).
தாயார்: பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லித் தாயார்.
தீர்த்தம்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்.
விமானம்: சுர விமானம்.
மங்களாசாசனம்: முதலாழ்வார்கள் மூவரும் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) மற்றும் திருமங்கையாழ்வார்.
ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று முதலாழ்வார்களை ஒன்று சேர்க்கவைத்த நிகழ்ச்சி நடந்த இடம்.
முதல் பகுதி நிறைவுற்றது.
--------------------