Thursday, September 23, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

67/13. திருக்குருகாவூர். (திருக்கடாவூர்).



குருகா வூருறை குணமே போற்றி.

அருள்மிகு நீலோத்பல விசாலாட்சி உடனுறை சுவேதரிஷபேஸ்வரர் திருக்கோயில். சீர்காழியிலிருந்து தென் திருமுல்லைவாயிளுக்குச் செல்லும் வழியில் 6 வது கி.மீ.ல் வடகால் என்னும் ஊரில் குருகாவூருக்கு சாலை பிரிகிறது. அதில் 1 கி.மீ. பயணிக்க வேண்டும். சுந்தரருக்கு, இறைவன் கட்டமுதும், நீரும் தந்தருள்செய்து, பசி போக்கிய தலம். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. 


8/14. சீகாழி. (சீர்காழி).










காழியுள் மேய கடலே போற்றி.

அருள்மிகு பெரியநாயகி உடனுறை பிரமபுரீஸ்வரர் திருக்கோயில். சிதம்பரத்தையடுத்துள்ள தலம். திருஞானசம்பந்தரின் அவதாரப் பதி. ஞானப் பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம். முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, ஆதிசேஷன், ராகு, கேது, வியாசர் முதலியோர் வழிபட்ட தலம். இங்கு மூன்று இறைவன் திருமேனிகள். அடிப்பாகத்திலுள்ள (மூலவர்) பிரமபுரீஸ்வரர் - பிரமன் பூசித்தது.- லிங்க வடிவம்.    இடைப்பாகத்திலுள்ள தோணியப்பர் (ஞானப்பால் தந்தவர்) குருவடிவம். மேல்
பாகத்திலுள்ள சட்டைநாதர் சங்கம வடிவம். மூவர் பாடல் பெற்ற தலம்.
 

Monday, September 20, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

64/10. திருப்பல்லவநீச்சுரம். (காவிரிப்பூம்பட்டிணம், பூம்புகார்)
பல்லவ னீ சரப் பரனே போற்றி.
அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை பல்லவனேஸ்வரர் திருக்கோயில். சம்பந்தர் பாடல் பெற்றது.
65/11. திருவெண்காடு.

 வெண்கா டுகந்த விகிர்த்தா போற்றி.
அருள்மிகு பிரமவித்யாநாயகி உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில். மயிலாடுதுறை - மங்கைமடம் சாலையில் உள்ளது. இந்திரன், வெள்ளையானை வழிபட்ட தலம். இங்குள்ள அகோர மூர்த்தி (உற்சவர்) மிக அழகிய வேலைப்பாடுடையது. மூவர் பாடல் பெற்ற தலம்.
66/12. கீழைத்திருக்காட்டுப்பள்ளி. (ஆரணயேஸ்வரர் திருக்கோயில்).
கீழ்த்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி.
அருள்மிகு அகிலாண்டநாயகி உடனுறை ஆரண்யசுந்தரேஸ்வரர் திருக்கோயில். திருவெண்காட்டிலிருந்து, இளையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் உள்ளது.(1 1/2. கி.மீ). விருத்திராசுரனைக் கொன்ற பழி நீங்க, இந்திதான் வழிபட்ட தலம்.நண்டு வழிபட்ட பதி. சம்பந்தர் பாடல் பெற்றது.

Tuesday, September 14, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

61/7. தென்திருமுல்லை வாயில். (திருமுல்லைவாசல்).
தென்திரு முல்லை வாயிலாய் போற்றி.
அருள்மிகு சதானந்த சௌந்தரி உடனுறை முல்லைவனநாதர் திருக்கோயில். தலம். சம்பந்தர் பாடல் பெற்றசீர்காழியிலிருந்து 13 கி.மீ. தொலைவு. சோழ மன்னனின் பிரமஹத்தி தோஷம் நீங்கிய து.
62/8. திருக்கலிக்காமூர். (அன்னப்பன் பேட்டை).
கலிக்கா மூர்வளர் கண்ணே போற்றி.
அருள்மிகு சுந்தராம்பாள் உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
திருவெண்காடு - சீர்காழி சாலையில் மங்கைமடம் ஊரையடைந்து, திருநகரி போகும் சாலையில் சென்று,கொனையாம்பட்டினம் என்று வழிகாட்டி உள்ள இடத்தில் திரும்பி, இத்தலலத்தையடயலாம். பராசர முனிவர் வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
63/9. திருச்சாய்க்காடு. (சாயாவனம்).

சாய்கா டினிதுறை சதுரா போற்றி.
அருள்மிகு கோஷாம்பாள் உடனுறை சாயாவனேஸ்வரர் திருக்கோயில். சீர்காழி - பூம்புகார் சாலையில் உள்ள தலம். காசிக்குச்சமமாக சொல்லப்படும் ஆறு தலங்களுள் ஒன்று. அவை: 
  1. திருவெண்காடு.
  2. மயிலாடுதுறை.
  3. திருவிடைமருதூர்.
  4. திருவையாறு. 
  5. ஸ்ரீ வாஞ்சியம்.
  6. திருச்சாய்க்காடு.
உபமன்யு முனிவர்,இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார், ஆகியோர் வழிபட்ட தலம். வில்லேந்திய வேலவர் மூர்த்தம் அவசியம் தரிசிக்க வேண்டும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

Sunday, September 12, 2010

59/5. திருநல்லூர்ப் பெருமணம்.(ஆச்சாள்புரம்).

 நல்லூர்ப் பெருமண நம்பா போற்றி.
அருள்மிகு வெண்ணீற்று உமை நங்கை உடனுறை சிவலோகத் தியாகேசர்  திருக்கோயில். சிதம்பரம் - சீர்காழி சாலையில் கொள்ளிடம் பாலம் தாண்டி, கொள்ளிடம் ஊரில் இடப்புறம் பிரியும் சாலையில் 8 கி.மீ. செல்லவேண்டும்.ஞானசம்பந்தர், திருமண கோலத்துடன் சோதியில் கலந்த தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
60/6. திருமயேந்திரப்பள்ளி. (மகேந்திரப்பள்ளி).
மஎந்திரப்பள்ளி மன்னா போற்றி.
அருள்மிகு வடிவாம்பாள் உடனுறை திருமேனியழகர் திருக்கோயில். நல்லூர்ப்பெருமணத்திலிருந்து (ஆச்சாள்புரம்) மேலும் 3 கி.மீ. செல்லவேண்டும். ஆண்டுதோறும் பங்குனித் திங்களில் ஒருவாரம் சூரியஒளி சுவாமிமீது படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்றது.

Wednesday, September 8, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

.
56/2. திருவேட்களம்.
வேட்கள நன்னகர் மேயாய் போற்றி.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளது.
அருள்மிகு சர்குணாம்பாள் உடனுறை பசுபதேச்வரர் திருக்கோயில். அர்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம். நாரதர் வழிபட்ட பதி. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
57/3. திருநெல்வாயில். (சிவபுரி).
நெல்வா யில்வளர் நிதியே போற்றி.
சிதம்பரக் - பெரம்பட்டு சாலையில் 3 கி.மீ செல்லவேண்டும். 
அருள்மிகு கனகாம்பிகை உடனுறை உச்சிநாதேஸ்வரர் திருக்கோயில். கண்வ மகரிஷி வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
58/4. திருக்கழிப்பாலை.


கழிப்பா லைஉறை கரும்பே போற்றி.
திருருநேல்வாயிலுக்கு (சிவபுரி) அருகாமையில் (1/2 கி.மீ) உள்ள தலம்.
அருள்மிகு வேதநாயகி உடனுறை பால்வண்ண நாதேஸ்வரர் திருக்கோயில். வால்மீகி முனிவர் வழிபட்ட தலம். மூலவர் பெயருக்கேற்ப வெண்ணிறமாக உள்ளார். இங்குள்ள பைரவர் காசியில் உள்ள பைரவரைப் போன்ற தோற்ற முள்ளவர்.மூவர் பாடல் பெற்றது.

Sunday, September 5, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
காவிரி வடகரை. (63).


55/1. கோயில் - சிதம்பரம்.















சென்னயிலிருந்து, திண்டிவனம்,கடலூர் வழியாக செல்வது சுலபம். 
அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசர்.திருக்கோயில். பஞ்ச பூத தலங்களுள் ஆகாசத்தலம். சிதம்பர ரகசியம் என்பது வெட்டவெளியை (ஆகாசம்) குறிக்கும்.
பஞ்ச சபைகளுள் பொற்சபை. ஆனந்த  நடனம். வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பெரும் பற்றினால் பூசித்தமையால் பெரும்பற்றப்புலியூர். சிட் +அம்பரம் (அறிவு + வெட்டவெளி) = சிதம்பரம். விராட்புருஷனின் வடிவத்தில், இறைவனின் மூலாதாரம் திருவாரூர். உந்தி திருவானைக்கா. மணிபூரகம் திருவண்ணாமலை. கழுத்து திருக்காளத்தி. புருவமத்தி காசி. இருதயஸ்தானம் சிதம்பரம். மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சுகர், திருநீலகண்டர், திருநாளைப்போவார் (நந்தனார்), கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், சந்தனாசாரியர்கள் முத்தி பெற்ற தலம். இக் கோயிலுள் திருமூலட்டானம் என்னும் தனிக்கோயில் உள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின், எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும், இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம். ஆதலின் இங்கு அர்த்தசாம வழிபாடு காண்பது சிறப்பு. இத்தலத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வுகளாவன:
  1. மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப்பெண்ணைப் பேச வைத்தது.
  2. திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது.
  3. உமாபதிசிவம் கொடிக்கவி பாடி கொடியேற வைத்தது.
  4. திருப்பல்லாண்டு பாடிச் சேத்தனார் தடைபட்ட தேரை ஓடச்செய்தது.
  5. திருமுறைகளை வெளிப்படுத்தியது.
  6. சேக்கிழார் பெருமானுக்கு திருத்தொண்டர் பாட அடியெடுத்துக் கொடுத்தது முதலியன.
மூவர் பாடல் பெற்றது.