Thursday, September 23, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

67/13. திருக்குருகாவூர். (திருக்கடாவூர்).



குருகா வூருறை குணமே போற்றி.

அருள்மிகு நீலோத்பல விசாலாட்சி உடனுறை சுவேதரிஷபேஸ்வரர் திருக்கோயில். சீர்காழியிலிருந்து தென் திருமுல்லைவாயிளுக்குச் செல்லும் வழியில் 6 வது கி.மீ.ல் வடகால் என்னும் ஊரில் குருகாவூருக்கு சாலை பிரிகிறது. அதில் 1 கி.மீ. பயணிக்க வேண்டும். சுந்தரருக்கு, இறைவன் கட்டமுதும், நீரும் தந்தருள்செய்து, பசி போக்கிய தலம். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. 


8/14. சீகாழி. (சீர்காழி).










காழியுள் மேய கடலே போற்றி.

அருள்மிகு பெரியநாயகி உடனுறை பிரமபுரீஸ்வரர் திருக்கோயில். சிதம்பரத்தையடுத்துள்ள தலம். திருஞானசம்பந்தரின் அவதாரப் பதி. ஞானப் பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம். முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, ஆதிசேஷன், ராகு, கேது, வியாசர் முதலியோர் வழிபட்ட தலம். இங்கு மூன்று இறைவன் திருமேனிகள். அடிப்பாகத்திலுள்ள (மூலவர்) பிரமபுரீஸ்வரர் - பிரமன் பூசித்தது.- லிங்க வடிவம்.    இடைப்பாகத்திலுள்ள தோணியப்பர் (ஞானப்பால் தந்தவர்) குருவடிவம். மேல்
பாகத்திலுள்ள சட்டைநாதர் சங்கம வடிவம். மூவர் பாடல் பெற்ற தலம்.
 

Monday, September 20, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

64/10. திருப்பல்லவநீச்சுரம். (காவிரிப்பூம்பட்டிணம், பூம்புகார்)
பல்லவ னீ சரப் பரனே போற்றி.
அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை பல்லவனேஸ்வரர் திருக்கோயில். சம்பந்தர் பாடல் பெற்றது.
65/11. திருவெண்காடு.

 வெண்கா டுகந்த விகிர்த்தா போற்றி.
அருள்மிகு பிரமவித்யாநாயகி உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில். மயிலாடுதுறை - மங்கைமடம் சாலையில் உள்ளது. இந்திரன், வெள்ளையானை வழிபட்ட தலம். இங்குள்ள அகோர மூர்த்தி (உற்சவர்) மிக அழகிய வேலைப்பாடுடையது. மூவர் பாடல் பெற்ற தலம்.
66/12. கீழைத்திருக்காட்டுப்பள்ளி. (ஆரணயேஸ்வரர் திருக்கோயில்).
கீழ்த்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி.
அருள்மிகு அகிலாண்டநாயகி உடனுறை ஆரண்யசுந்தரேஸ்வரர் திருக்கோயில். திருவெண்காட்டிலிருந்து, இளையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் உள்ளது.(1 1/2. கி.மீ). விருத்திராசுரனைக் கொன்ற பழி நீங்க, இந்திதான் வழிபட்ட தலம்.நண்டு வழிபட்ட பதி. சம்பந்தர் பாடல் பெற்றது.

Tuesday, September 14, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

61/7. தென்திருமுல்லை வாயில். (திருமுல்லைவாசல்).
தென்திரு முல்லை வாயிலாய் போற்றி.
அருள்மிகு சதானந்த சௌந்தரி உடனுறை முல்லைவனநாதர் திருக்கோயில். தலம். சம்பந்தர் பாடல் பெற்றசீர்காழியிலிருந்து 13 கி.மீ. தொலைவு. சோழ மன்னனின் பிரமஹத்தி தோஷம் நீங்கிய து.
62/8. திருக்கலிக்காமூர். (அன்னப்பன் பேட்டை).
கலிக்கா மூர்வளர் கண்ணே போற்றி.
அருள்மிகு சுந்தராம்பாள் உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
திருவெண்காடு - சீர்காழி சாலையில் மங்கைமடம் ஊரையடைந்து, திருநகரி போகும் சாலையில் சென்று,கொனையாம்பட்டினம் என்று வழிகாட்டி உள்ள இடத்தில் திரும்பி, இத்தலலத்தையடயலாம். பராசர முனிவர் வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
63/9. திருச்சாய்க்காடு. (சாயாவனம்).

சாய்கா டினிதுறை சதுரா போற்றி.
அருள்மிகு கோஷாம்பாள் உடனுறை சாயாவனேஸ்வரர் திருக்கோயில். சீர்காழி - பூம்புகார் சாலையில் உள்ள தலம். காசிக்குச்சமமாக சொல்லப்படும் ஆறு தலங்களுள் ஒன்று. அவை: 
  1. திருவெண்காடு.
  2. மயிலாடுதுறை.
  3. திருவிடைமருதூர்.
  4. திருவையாறு. 
  5. ஸ்ரீ வாஞ்சியம்.
  6. திருச்சாய்க்காடு.
உபமன்யு முனிவர்,இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார், ஆகியோர் வழிபட்ட தலம். வில்லேந்திய வேலவர் மூர்த்தம் அவசியம் தரிசிக்க வேண்டும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

Sunday, September 12, 2010

59/5. திருநல்லூர்ப் பெருமணம்.(ஆச்சாள்புரம்).

 நல்லூர்ப் பெருமண நம்பா போற்றி.
அருள்மிகு வெண்ணீற்று உமை நங்கை உடனுறை சிவலோகத் தியாகேசர்  திருக்கோயில். சிதம்பரம் - சீர்காழி சாலையில் கொள்ளிடம் பாலம் தாண்டி, கொள்ளிடம் ஊரில் இடப்புறம் பிரியும் சாலையில் 8 கி.மீ. செல்லவேண்டும்.ஞானசம்பந்தர், திருமண கோலத்துடன் சோதியில் கலந்த தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
60/6. திருமயேந்திரப்பள்ளி. (மகேந்திரப்பள்ளி).
மஎந்திரப்பள்ளி மன்னா போற்றி.
அருள்மிகு வடிவாம்பாள் உடனுறை திருமேனியழகர் திருக்கோயில். நல்லூர்ப்பெருமணத்திலிருந்து (ஆச்சாள்புரம்) மேலும் 3 கி.மீ. செல்லவேண்டும். ஆண்டுதோறும் பங்குனித் திங்களில் ஒருவாரம் சூரியஒளி சுவாமிமீது படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்றது.

Wednesday, September 8, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

.
56/2. திருவேட்களம்.
வேட்கள நன்னகர் மேயாய் போற்றி.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளது.
அருள்மிகு சர்குணாம்பாள் உடனுறை பசுபதேச்வரர் திருக்கோயில். அர்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம். நாரதர் வழிபட்ட பதி. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
57/3. திருநெல்வாயில். (சிவபுரி).
நெல்வா யில்வளர் நிதியே போற்றி.
சிதம்பரக் - பெரம்பட்டு சாலையில் 3 கி.மீ செல்லவேண்டும். 
அருள்மிகு கனகாம்பிகை உடனுறை உச்சிநாதேஸ்வரர் திருக்கோயில். கண்வ மகரிஷி வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
58/4. திருக்கழிப்பாலை.


கழிப்பா லைஉறை கரும்பே போற்றி.
திருருநேல்வாயிலுக்கு (சிவபுரி) அருகாமையில் (1/2 கி.மீ) உள்ள தலம்.
அருள்மிகு வேதநாயகி உடனுறை பால்வண்ண நாதேஸ்வரர் திருக்கோயில். வால்மீகி முனிவர் வழிபட்ட தலம். மூலவர் பெயருக்கேற்ப வெண்ணிறமாக உள்ளார். இங்குள்ள பைரவர் காசியில் உள்ள பைரவரைப் போன்ற தோற்ற முள்ளவர்.மூவர் பாடல் பெற்றது.

Sunday, September 5, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.2.

நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
காவிரி வடகரை. (63).


55/1. கோயில் - சிதம்பரம்.















சென்னயிலிருந்து, திண்டிவனம்,கடலூர் வழியாக செல்வது சுலபம். 
அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசர்.திருக்கோயில். பஞ்ச பூத தலங்களுள் ஆகாசத்தலம். சிதம்பர ரகசியம் என்பது வெட்டவெளியை (ஆகாசம்) குறிக்கும்.
பஞ்ச சபைகளுள் பொற்சபை. ஆனந்த  நடனம். வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பெரும் பற்றினால் பூசித்தமையால் பெரும்பற்றப்புலியூர். சிட் +அம்பரம் (அறிவு + வெட்டவெளி) = சிதம்பரம். விராட்புருஷனின் வடிவத்தில், இறைவனின் மூலாதாரம் திருவாரூர். உந்தி திருவானைக்கா. மணிபூரகம் திருவண்ணாமலை. கழுத்து திருக்காளத்தி. புருவமத்தி காசி. இருதயஸ்தானம் சிதம்பரம். மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சுகர், திருநீலகண்டர், திருநாளைப்போவார் (நந்தனார்), கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், சந்தனாசாரியர்கள் முத்தி பெற்ற தலம். இக் கோயிலுள் திருமூலட்டானம் என்னும் தனிக்கோயில் உள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின், எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும், இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம். ஆதலின் இங்கு அர்த்தசாம வழிபாடு காண்பது சிறப்பு. இத்தலத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வுகளாவன:
  1. மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப்பெண்ணைப் பேச வைத்தது.
  2. திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது.
  3. உமாபதிசிவம் கொடிக்கவி பாடி கொடியேற வைத்தது.
  4. திருப்பல்லாண்டு பாடிச் சேத்தனார் தடைபட்ட தேரை ஓடச்செய்தது.
  5. திருமுறைகளை வெளிப்படுத்தியது.
  6. சேக்கிழார் பெருமானுக்கு திருத்தொண்டர் பாட அடியெடுத்துக் கொடுத்தது முதலியன.
மூவர் பாடல் பெற்றது.


Saturday, August 14, 2010

THIRUMURAITTHALANGAL - 276.. Divya Desankal - 108. PART.1.

.திருமுறைத் தலங்கள் - 276 .

ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை  ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

அன்பு சிவமிரண் டென்ப ரரிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார் 
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின் 
அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே.

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் 
தேடித் திரிந்து சிவபெரு மானென்று 
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் 
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.
-திருமந்திரம்.
 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 
ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி 
வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத வூரர்த்திருத் தாள் போற்றி.
-நால்வர்துதி.
 
கற்பக வினாயகார் - பிள்ளையார் பட்டி
 
 ஸ்ரீ சுப்ரம்மண்ய சுவாமி - மயிலாப்பூர்..
சோமாஸ்கந்தர் - திருமழபாடி.
 
மரகத நடராஜர் - உத்தரகோசமங்கை.
 
நந்தனாருக்காக ஒதுங்கிய நந்தி - திருப்புன்கூர். 

நமது  புண்ணிய பாரத தேசத்தில் அமைந்துள்ள கோயில்கள் எண்ணில் அடங்கா. இங்கு அவதரித்த மகான்களான  ஆழ்வார்களும், நாயன்மார்களும் பாரததேசமெங்கும் சுற்றி வந்து, இக் கோயில்களில் உறையும் இறைவனைத் தரிசித்து ,துதித்து,  பாடல்கள் பாடி வழிபட்டுள்ளனர். ஆழ்வார்கள் பாடிய தலங்கள், திவ்யதேசங்கள் எனவும், அப்பர் ,சம்பந்தர்,சுந்தரர் (மூவர்) பாடிய தலங்கள் திருமுறைத்தலங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. முதலில் இந்த வலைப்பூவில், அடியேன் சென்று தரிசித்து வந்த திருமுறைத் தலங்களின் விபரங்களை, சுருக்கமாக, அழகிய புகைப்படங்களுடன் கண்டு மகிழ அன்பர்களை அழைக்கிறேன்.

திருமுறைத்தலங்கள் மொத்தம்  276 . 
தொண்டைநாடு : 32.
நடுநாடு : 22.
சோழநாடு (காவிரி வடகரை ) : 63 .
சோழநாடு (காவிரி தென்கரை) : 127 .
பாண்டியநாடு :14 .
கொங்குநாடு : 7 .
மலைநாடு : 1 .
துளுவநாடு : 1 .
வடநாடு : 5.
ஈழநாடு : 2.
புதிதாககக் கண்டுபிடித்தவை : 2  
இனி ஒவ்வொரு வாரமும்  இவ் வலைப்பூவில் ஒரு திருமுறைத் தலத்தைத் தரிசிக்கலாம். 

Hello All,
I have been visiting many ancient temples in Tamil Nadu after I retired, with the goal of collecting rare data about some of these beautiful obscure places that tourists or devotees seldom visit and also capture the architectural beauty in pictures. Hindu saints of days long gone, have visited many of these temples and composed poetry in praise of the presiding deities. The places visited by the Aazhwars (http://www.sparthasarathy.com/vaishnava/azhwar/azhwar.html) are called the "Divya desangaL" and those graced by the three saints Appar, Sambandar and Sundarar are known as the "ThirumuaithhalangaL".  I hope to post a blog entry each week about each of these temples accompanied by photographs and travel tips.
There are 276 temples in the category of ThirumuraithhalangaL and most of these are in Tamil Nadu. The geographical breakup is as follows:
  • North Tamil Nadu (Thondai nadu): 32
  • Central Tamil Nadu (Nadu nadu): 22
  • North of the Cauvery river (Sozha nadu -Kaviri vadakarai): 63
  • South of the Cauvery river (Sozha nadu -Kaviri thenkarai): 127
  • South Tamil nadu (Pandya nadu): 14
  • West Tamil nadu (Kongu nadu):  7
  • Kerala (Melai nadu): 1
  • Karnataka (Thuluva nadu): 1
  • North India (Vada nadu): 5
  • Sri Lanka (Eezha nadu): 2
  • Newly discovered: 2
I hope to post on each individual temple every week and share pictures.

- Adiyarkadiyen


THONDAINATTU THLANGAL -32.
தொண்டைநாட்டுத் தலங்கள் -32 .

 ஏக்கம் பத்துறை எந்தாய் போற்றி 
1.திருக்கச்சி ஏகம்பம்.
அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் 
(பெரிய) காஞ்சிபுரம்
சென்னை - பெங்களூரு  நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் தாண்டி காஞ்சிபுரம் சாலை இடப்புறம் பிரிகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட நகரம். கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர்  என்பது அப்பர் பெருமான் வாக்கு. சக்தி பீடங்களுள் ஒன்றான காமகொட்டமும், முருகப்பெருமான் அருள்பாலிக்கும் குமரகொட்டமும், கச்சிஎகம்பமும் சோமாஸ்கந்த வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த பதி. கண் பார்வையிழந்த சுந்தரர், திருவெண்பாக்கத்தில் ஊன்று கொலைப் பெற்று, இத்தலத்திற்கு வந்து இடக்கண் பெற்ற அற்புதம் நிகழ்ந்த ஊர். மயானத்தலங்கள் நான்கினுள் ஒன்று.
(காசி, காஞ்சி, கடவூர் மயானம், நாலூர் மயானம்) பஞ்சபூதத் தலங்களுள் பிருதிவி (மணல்) தலம். ஏகம் + ஆம்ரம் = ஏகாம்பரம் (ஒற்றை மாமரம்). வேதமே இங்கு மாமரமாக அமைந்தது என்பர். இதன் நான்கு கிளைகளிலிருந்து கிடைக்கும் பழங்கள் நான்கு விதமான சுவையுடையது என்பர். மூலவர் மணல் லிங்கம். அபிஷேகம் அனைத்தும் ஆவுடையாருக்கே. மூவர் பாடல் பெற்ற தலம்.
பஞ்சபூத தலங்களாவன 
  1. நிலம் - காஞ்சி.
  2. நீர் - திருவானைக்காவல்.
  3. காற்று - ஸ்ரீ காலஹஸ்தி.
  4. நெருப்பு - திருவண்ணாமலை.
  5. ஆகாசம் - சிதம்பரம்.
Kachi Ekambam. Kanchipuram.
Kanchipuram is an ancient historical city situated around 110 Kms from Chennai city center, off the Chennai - Bangalore highway (Kanchipuram map). The city is known for its silk and it teems with magnificient temples, most notably the Varadaraja perumaaL temple and  the Kamakshi amman temple. Kachi Ekambam or the Ekambareswarar temple in Periya Kanchipuram is yet another noteworthy temple. The main deity here is the Lord Ekambareswarar (Lord Shiva) with Kamatchi Amman as his consort, in her own temple at Kamakottam , a km away from the main temple. The holy mango tree in the temple premises is considered to be a physical manifestation of the holy Vedas. It is said that the 4 main branches of the tree yield fruits that taste different from each other. Ekambareswarar is found in the form of a sand lingam.
A view of the Ekambam temple.

 குமரகோட்டம், Kumarakottam

 காமாஷி  அம்மன் திருக்கோயில், Kamakshi Amman Temple.

2.திருக்கச்சி மேற்றளி.
 கச்சிமேற் றளியுறை கடலே போற்றி.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ள திருக்கோயில். அருள்மிகு மேற்றளி நாயகி உடனுறை மேற்றலீஸ்வரர். திருமால் தவமிருந்து சிவசாரூபம் பெற்ற தலம். அப்பர், சுந்தரர் பாடல் பெற்றது.
3.ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம்.
  ஓண காந்தன் தளியாய் போற்றி.
அருள்மிகு ஒனேஸ்வரர் மற்றும் காந்தேஸ்வரர் திருக்கோயில். வானாசுரனுடைய தளபதிகளான ஒணன் மற்றும் காந்தன் இருவரும் வழிபட்ட தலம், சுந்தரர் பாடல் பெற்றது.
 4. கச்சி அன்நேகதங்காவதம். காஞ்சிபுரம்.  
 கச்சிஅ நேகதங் காவதா போற்றி.
  அருள்மிகு அனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில். அனேகதம் = யானை. யானை முகத்துடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம். சுந்தரர் பாடல் பெற்றது.
 அருகே கயிலாயநாதர் திருக்கோயில். 
5. கச்சிநெறிக் காரைக்காடு. 
 கச்சிநெறிக் காரைக் காடா போற்றி.
அருள்மிகு சத்யவிரதேஸ்வரர் திருக்கோயில் . காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியில் உள்ளது.. இந்திரனும், புதனும் வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
 6.குரங்கணில்முட்டம்.
குரங்கணில் முட்டங் குலவினாய் போற்றி.
அருள்மிகு இறையார் வலையம்மை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயில். காஞ்சியிலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில்  தூசி என்னும் கிராமத்தையடைந்து, கிழக்கே 2 .கி.மீ பயணிக்க வேண்டும். வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காக்கை) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
7. மாகறல்.
மாகறல் வாழும் மருந்தே போற்றி.
அருள்மிகு திரிபுவனநாயகி உடனுறை திருமாகறலீஸ்வரர்  திருக்கோயில். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் (வழி - ஓரிக்கை) சாலையில் உள்ள தலம்.இந்திரன் வழிபட்ட பதி. இராசேந்திர சோழனுக்கு இறைவன் பொன் உடும்பாகட் தோன்றி, ஓடி ஒளிந்து, பின் சிவலிங்கமாக வெளிப்பட்ட தலம். மூலவர் ஒடுங்கிய சுயம்பு மூர்த்தி. சம்பந்தர் பாடல் பெற்றது (வினை நீக்கும் பதிகம்).
8. திருவோத்தூர். (திருவத்திபுரம்)

ஓத்தூர் மேவிய ஒளியே போற்றி.
அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோயில். இத் தலத்தின் தற்போதையப் பெயர் திருவத்ததிபுரம். செய்யாறு அருகே உள்ளது. ஒத்து = வேதம்.இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர். பனை மரத்தைத் தல விருஷமாகக் கொண்ட தலங்கள் ஐந்துள் ஒன்று. (திருப்பனந்தாள் வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர்),சம்பந்தர் பாடல் பெற்றது.
9.வன்பார்த்தான் பனங்காட்டூர். (திருப்பனங்காடு)
வன்பார்த்தான் பனங்காட் டூரா போற்றி.
அருள்மிகு அமிர்தவல்லி உடனுறை தாலபுரீஸ்வரர் திருக்கோயில். காஞ்சிபுரம் - கலவை - பெருங்காட்டூர் சாலையில் சென்றால் திருப்பனங்காடு கூட்ரோடு வரும்.. அங்கிருந்து திருப்பனங்காடு சாலையில் 2 கி.மீ பயணிக்க வேண்டும். சுந்தரர் பாடல் பெற்றது.
10. திருவல்லம் (திருவலம்).
 திருவல்லம் மேவிய தீவணா போற்றி.
அருள்மிகு தனுமத்யாம்பாள் உடனுறை வில்வநாதீஸ்வரர் திருக்கோயில். வேலூருக்கு அருகில் உள்ளது.கௌரி, மகாவிஷ்ணு, சனகமுனிவர் ஆகியோர் வழிபட்ட தலம். இங்கு நந்தியெம்பெருமான் கஞ்சன் என்னும் அசுரனை அழித்து, பின், காவலுக்காக கிழக்கு நோக்கியுள்ளார். மௌனகுரு சுவாமிகள், வாழ்ந்து தொண்டாற்றிய தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
11.திருமாற்பேறு. (திருமால்பூர்)
 
மாற்பே றாள்உமை மணாளா போற்றி.
அருள்மிகு அஞ்சனாட்சி உடனுறை மனிகண்டேஸ்வரர் திருக்கோயில். காஞ்சிபுரம் -அரக்கோணம் சாலையில் திருமால்பூர் ரயில் நிலையத்தின் மேற்கே பிரியும் சாலையில் 5 கி.மீ செல்ல வேண்டும் .
12. திருவூறல்.(தக்கோலம்)
திருவூ றல்வளர் தேவே போற்றி.
அருள்மிகு கிரிராஜ கன்னிகை உடனுறை ஜலநாதேஸ்வரர் திருக்கோயில். காஞ்சியிலிருந்து 30 கி.மீ. இறைவன் தக்கனின்(அசுரன்) தலையைக் கொய்த தலம். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக்கண்டு ஓலைமிட்டதால் தக்கோலம் என்பர், சம்பந்தர் பாடல் பெற்றது.
13. இலம்பையங்கோட்டூர்.(எலுமியன் கோட்டூர்)
இலம்பையங் கோட்டூர் ஈசா போற்றி.
அருள்மிகு கனககுஜாம்பிகை உடனுறை அர்ம்பேஸ்வரர் திருக்கோயில். சென்னையிலிருந்து செல்லம்பட்டிடை (பேரம்பாக்கம் சாலை) சென்று அங்கிருந்து 1 கி.மீல் உள்ள இத்தலத்தை அடையலாம்.இறைவன் ஒரு சிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும், பின் ஒரு பசு போலவும் வந்து, திருஞானசம்பன்தரை வழிநடத்திக்  கூட்டிச் சென்ற பதி. சம்பந்தர் பாடல் பெற்றது.
14. திருவிற்கோலம். (கூவம்)
 விற்கோ லத்துறை வீரா போற்றி.
 அருள்மிகு திரிபுராந்தகி உடனுறை திரிபுராந்தகேசஸ்வரர் திருக்கோயில். சென்னையிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள தலம்.இறைவன் மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலம். திரு+வில்+கோலம்= திருவிற்கோலம். மூலவர் சுயம்பு. தீண்டாத் திருமேனி. மழைக்காலங்களில் இவ்விறைவன் மேல் வெண்மை படருகிறது. இங்குள்ள அக்னிதீர்த்தக் குளத்தில் தவளைகளே இல்லை. சம்பந்தர் பாடல் பெற்றது.
15. திருவாலங்காடு.


 ஆலங் காட்டெம் அடிகள் போற்றி 
அருள்மிகு பிரமராளகாம்பாள் உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்.
சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. வடாரண்யம் என்று பெயர் பெற்ற தலம். காரைக்கால்லம்மையார் தலையால் நடந்து வந்து நடராசப் பெருமானின் திருவடிக்கீழ் அமர்ந்து சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலம். பஞ்ச சபைகளுள் முதல் சபை.
பஞ்ச சபைகளாவன:
1. இரத்தினசபை - திருவாலங்காடு.
2. பொன்னம்பலம் (பொற்சபை) - சிதம்பரம்.
3. வெள்ளியம்பலம் (வெள்ளிசபை) - மதுரை.
4.தாமிரசபை - திருநெல்வேலி (செப்பறை)
5. சித்திரசபை - குற்றாலம் - குற்றாலநாதர் கோயிலிலிருந்து 1 கி.மீ.
கார்க்கோடன், சனந்த முனிவர் முதலியோர் வழிபட்ட பதி. மூவர் பாடல் பெற்ற தலம்.
16. திருப்பாசூர். (திருப்பாச்சூர்)

 பாசூர் அமர்ந்த பாசுபதீ போற்றி.
 அருள்மிகு பசுபதிநாயகி உடனுறை வாசீஸ்வரர் திருக்கோயில். சென்னை திரூத்தனி சாலையில் கடம்பத்தூர் சாலை பிரியும் இடத்தில் (திருவள்ளூர் தாண்டி) உள்ளது. அம்பாள், சந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட தலம். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
17. திருவெண்பாக்கம். (பூண்டி).
 வெண்பாக் கத்துறை விமலா போற்றி.
 அருள்மிகு தடித்கெளரி  அம்பாள் உடனுறை ஆதாரதண்டேஸ்வரர் திருக்கோயில். திருவள்ளூர் அருகே பூண்டி நீர்த்தேக்கத்தின் கரையில் உள்ளது. சுந்தரருக்கு இறைவன் ஊன்றுகோல் அளித்த பதி. சுந்தரர் பாடல் பெற்றது.    
18. திருக்கள்ளில். (திருக்கள்ளம்,திருக்கண்டலம்).
 கள்ளில் மேய கனியே போற்றி.
 அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில். சென்னை - பெரியபாளையம் சாலையில்  கன்னிகைப்பேர் அடைந்து 2. கி.மீ உள்ளே செல்ல வேண்டும்.பிருகு முனிவர் வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது. அருகே பெரியபாளையத்தம்மன் கோயில் மிக பிரசித்தி பெற்றது.
பெரியபாளையத்தம்மன் திருக்கோயில்.
 பெரியபாளையம் சிவன் கோயில்.
19. திருக்காளத்தி. (ஸ்ரீ காளஹஸ்தி).


காளத்தி நாதனின் கழலிணை போற்றி.
அருள்மிகு ஞானப்பிரசுன்னாம்பிகை உடனுறை ஸ்ரீ காளத்தீஸ்வரர் திருக்கோயில். சென்னையுளிருந்து 110. கி.மீ. தொலைவு. ஸ்ரீ+காளம்+அத்தி = காளஹஸ்தி . சிலந்தி, பாம்பு, யானை மூன்றும் வழிபட்டு பேறு பெற்ற தலம். கயிலைபாதி காளஹஸ்தி பாதி என்பது நக்கீரர் வாக்கு. கண்ணப்பநாயனார் தொண்டாற்றி வீடு பேறு பெற்ற தலம். (கண்ணப்பனை விஞ்சிய பக்தனில்லை) முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். சிறந்த ராகு, கேது பரிகார ஷேத்திரம். மூலவர் சுயம்பு-தீண்டாத்திருமேனி. கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற லிங்கமாதலின் இங்கு திருநீறு தரும் மரபில்லை. பச்சைக்கற்பூரம், பன்னீர் கலந்த தீர்த்தம், பிரசாதமாக வழங்கப் படுகிறது. மூவர் பாடல் பெற்றது. 
20. திருவொற்றியூர். (சென்னை).
 ஒற்றி யூருடை ஒருவ போற்றி.
   அருள்மிகு திருபுரசுந்தரி (வடிவுடையம்மை) உடனுறை ஆதிபுரீஸ்வரர்  திருக்கோயில். ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். சுந்தரர் சங்கியாரை மணந்துகொண்ட பதி. களியனாயனாரின் அவதாரத் தலம். தியகேசப்பெருமான் எழுந்தருளியுள்ள கோயில். ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன் ஆகியோர் வழிபட்டது. மூலவர் சுயம்பு. ர்ப்போழுதும் கவசத்துடனேயே உள்ள இப் பெருமானை, கார்த்திகை மாதம், பௌர்ணமி தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் கவசமின்றி தரிசிக்கலாம். அந்நாட்களில் சுவாமிக்கு , புனுகு சட்டம், சாம்பிராபணித் தைலம் ஆகியவை சார்த்தப்படுகிறது. மூவர் பாடல் பெற்ற தலம்.
21. திருவலிதாயம்.(பாடி - சென்னை)
 வலிதா யம்உறை வள்ளல் போற்றி.
அருள்மிகு ஜகதாம்பாள்  உடனுறை வல்லீஸ்வரர் திருக்கோயில். பரத்வாஜர், இராமர்,ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், வலியன் (கருங்குருவி) முதலானோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்ற தலம். சம்பந்தர் பாடல் பெற்றது. 
22. (வட) திருமுல்லைவாயில். (திருமுல்லைவாயில்)

 வடதிரு முல்லை வாயிலாய் போற்றி.
 அருள்மிகு லதாமத்யாம்பாள் (கொடியிடை நாயகி) உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில். சென்னை-ஆவடி சாலையில் உள்ள தலம். அரசன் தொண்டைமானுக்காக நந்திகேஸ்வரரை போருக்குத் துணையாக அனுப்பிய இறைவன் வீற்றிருக்கும் தலம். சென்னை பொன்னேரி அருகேயுள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடையம்மை, திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, மற்றும் இத்தலத்து கொடியுடையம்மை, இம் மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம் மூன்று அம்பிகைகளையும், வெள்ளிக்கிழமையும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளில், முறையே காலை, மதியம், மாலையில் தரிசித்தல் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது. சுந்தரர் பாடல் பெற்ற தலம்.
23. திருவேற்காடு. (சென்னை)

 வேற்காட்டு வேத வித்தகா போற்றி.
    அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோயில். சென்னை-பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் (தெற்கே) சாலையில் 2 கி.மீ.அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி அருளிய தலம். நான்கு வேதங்களும் வேலமரங்களாக நின்று வழிபட்டதால் வேல்காடு-வேற்காடு ரணப் பெயர் பெற்றது. இத்தலத்திற்கு விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பு உண்டு. இங்குள்ள கருமாரியம்மன்  கோயில் வெகு விசேஷம், சம்பந்தர் பாடல் பெற்றது.
திருவேற்காடு கருமாரியம்மன் ஆலையம்.
24. மயிலாப்பூர். (சென்னை).


 மயிலைக் கபாலீச் சரத்தாய் போற்றி.
 அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயில். திருமயிலைக் கபாலீச்சரம் என்று சிறப்பிக்கப்படும் இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவிலிருந்து வழிபட்டமையால் மயிலாப்பூர் என்று பெயர் பெற்றது. வாயிலார் நாயனார் அவதாரத் தலம். தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவதார ஷேத்திரம். திருஞானசம்பந்தர் எலும்பைப் பெண்னாக்கிய (பூம்பாவை) அற்புதம் நிகழ்ந்த தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
25. திருவான்மியூர். (சென்னை).
 வான்மியூ ரமர்ந்த வாழ்வே போற்றி. 
அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோயில். வான்மீகி முனிவருக்கு இறைவன் நடனக்காட்சி அருளிய பதி. அப்பைய தீஷிதருக்காக, இறைவன் மேற்கு நோக்கித் திரும்பி காட்சிகொடுத்த தலம். சூரியன், பிருங்கி முனிவர் முதலியோர் வழிபட்ட தலம். தியாகராஜர் சந்நிதி உண்டு. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. 
26. திருக்கச்சூர். (கச்சூர்). 
1.ஆலக்கோயில்.


  2. மலையடிக்கோயில்.

 கச்சூ ராலக் கோயிலாய் போற்றி.
 சென்னை-செங்கல்பட்டு சாலையில் (GST Road) சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் சாலையில் 1 1/2. கி.மீ ல் கச்சூர் சாலை (வலப்புறமாக) பிரிகிறது. இங்கு ஆலக்கோயில், மலையடிக்கோயில் என இரண்டு கோயில்கள் உள்ளன. அருள்மிகு அஞ்சனாட்ஷியம்மை உடனுறை  விருந்திட்ட ஈஸ்வரர் ஆலக்கொயிளிலும், அருள்மிகு அந்தகநிவாரிணி அம்பாள் உடனுறை மருந்தீஸர் மலையடிக் கோயிலிலும் அருள் பாலிக்கின்றனர். சுந்தரருக்காக இறைவன் வீடுதோறும் சென்று உணவு பெற்று வந்து அன்னமிட்ட தலம். அமுதம் திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப (ஆமை) வடிவிலிருந்து இறைவனை இத்தலத்தில் வழிபட்டதாக வரலாறு. இங்குள்ள தியாகராசருக்கு அமுததியாகேசர் என்று பெயர்.சுந்தரர் பாடல் பெற்றது.  
27. திருஇடைச்சுரம். (திருவடிசூலம்)

 இடைச்சுரம் இருந்த எழிலவண போற்றி.
 அருள்மிகு கொபர்த்தனாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வரர் திருக்கோயில். செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் உள்ள தலம். கௌதம மகரிஷியும்,சனற்குமாரரும் வழிபட்ட தலம். அம்பாள் பசு வடிவில் வந்து பால் சொரிந்து வழிபட்ட பதி. சம்பந்தர் பாடல் பெற்றது.  
28. திருக்கழுக்குன்றம்.
 1. தாழக்கோயில்.




 2. மலைக்கோயில்.

 திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி.
1.  அருள்மிகு திரிபுராந்தகி உடனுறை பக்தவத்ஸலேசஸ்வரர் திருக்கோயில். (தாழக்கோயில்). 2. அருள்மிகு சொக்கநாயகி உடனுறை வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி, மார்க்கண்டேயர் வழிபட்டது). திருக்கோயில். மணிவாசகருக்கு  இறைவன் குறு வடிவாகக் காட்சி தந்தருளிய தலம். இங்குள்ள பிரசித்தி பெற்ற சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு உற்பத்தியாவதாகக் கூறுகின்றனர். மூவர்  பாடல் பெற்ற தலம்.
29. அச்சிறுபாக்கம். (அச்சரப்பாக்கம்).

 அச்சிறு பாக்கம் அமர்ந்தாய் போற்றி.
 அருள்மிகு சுந்தரநாயகி உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் தாண்டி உள்ள தலம். விநாயகரை வணங்காது, திரிபுரம் எரிக்கஸ் சென்ற இறைவனின் தேர் அச்சு முறிந்த இடம். அச்சு + இறு + பாக்கம். கௌதமர், கண்வர், ஆகியோர் வழிபட்ட பதி. சம்பப்தர் பாடல் பெற்றது.
30. திருவக்கரை. 

 வக்கரை அமர்ந்த வரதா போற்றி.
 அருள்மிகு அமிர்தேஸ்வரி உடனுறை சந்திரசேகரேஸ்வரர் திருக்கோயில். திண்டிவனம் - மயிலம் - வானூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும்  இடத்தில் பிரியுயம் (வலப்புறம்) கிளைப்பாதையில் 7 கி.மீ செல்லவேண்டும். வக்ரன் வழிபட்ட தலம் வக்கரை என்றாயிற்று. இங்குள்ள வக்கிரகாளியம்மன் சந்நிதி மிகப் பிரசித்தம். சம்பந்தர் பாடல் பெற்றது. இவ்வூரில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்ட மரங்கள் கல்மரங்களாகக் காட்சியளிக்கின்றன. படங்கள் கீழே:
i

 
31. திருஅரசிலி. (ஒழிந்தியாப்பட்டு)
 அரசிலி நாதா ஐயா போற்றி.
அருள்மிகு பெரியநாயகி உடனுறை அரசலீஸ்வரர் திருக்கோயில். திண்டிவனம் - பாண்டிச்சேரி (வழி-கிளியனூர்) சாலையில் தைலாபுரம் தாண்டி இடப்புறம் பிரியும் சாலையில் 2. கி.மீ. பயணித்து இத்தலத்தையடயலாம். இத்தலத்தில் வாமதேவ முனிவர், சாளுவ மன்னன் ஆகியோர் பிரதோஷ விரதம் இருந்து பேறு பெற்றனர். சம்பந்தர் பாடல் பெற்றது.
32.திரு இரும்பைமாகாளம்.(இரும்பை)
 இரும்பைமா காளத் திறைவா போற்றி.
அருள்மிகு மதுரசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் திருக்கோயில். திண்டிவனம் - பாண்டிச்சேரி (வழி-கிளியனூர்) சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடைத் தாண்டி இடப்புறம், இரும்பை சாலை பிரிகிறது. அதில் 2. கி.மீ தூரம் பயணித்து இத் தலத்தை அடைய வேண்டும். இக்கோவில் சிவலிங்கத்தின் (மூலவர்) மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்துள்ளது. கடுவெளிச்சித்தர், ஊர் மக்கள் ஏளனம் செய்வது கண்டு பொறாது, இறைவனை நோக்கிப் பாட, லிங்கத்திரு மேனி  மூன்றாக வெடித்து பிளந்ததாக செவி வழி வரலாறு. சம்பந்தர் பாடல் பெற்றது.

தொண்டைநாட்டில் அமைந்துள்ள பிற கோயில்கள். 

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் - மாடம்பாக்கம், சென்னை.
 
 அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம்,சென்னை.
 
 அருள்மிகு பங்கஜாம்பாள் உடனுறை கங்காதீஸ்வரர் திருக்கோயில், புரசைவாக்கம், சென்னை.
 
 அருள்மிகு வேங்கீஸ்வரர் திருக்கோயில். வடபழனி சென்னை.
 

 
 அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில். சைதாப்பேட்டை, சென்னை.
 

 அருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயில். கோவூர்,சென்னை.

சென்னை மயிலாபூரிலுள்ள அஷ்ட ருத்ர ஷேத்திரங்கள்.
  1. கபாலீசம் - மண்.
  2. காரணீசம் - அக்னி.
  3. வெள்ளீசம் - வானம்.
  4. விருபாட்சீசம்- காற்று.
  5. மல்லேசம் - சந்ந்திரன்.
  6. வாலீசம் - சூரியன்.
  7. தீர்த்தபாலீசம் - தண்ணீர்.
  8. திருவேட்டீஸ்வரம் - ஆத்மநாதன்.
 
 
அருள்மிகு பூவுடைநாயகி உடனுறை சிங்கீச்வரர் மற்றும் வாலீஸ்வரர் திருக்கோயில். மப்பேடு. பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில் உள்ள தலம். ஸ்ரீ ஆஞ்சநேயர் அம்ருதவர்ஷினி ராகம் பாடி சிவனைத் துதித்த தலம். எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான பரிகாரத் தலம்.


 
 அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில். திருமழிசை. பூந்தமல்லி -திருவள்ளூர் சாலையில் பூந்தமல்லியிலிருந்து 2 கி.மீ.
 
 
 அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோயில். திருத்தனி.
ஆர்காடை (வேலூர்-ஆற்காடு) சுற்றியுள்ள சப்தரிஷிகள் ஸ்தாபித்த ஸ்தலங்கள்:
  1. மேல்விஷாரம். - ஸ்ரீ வால்மீகீஸ்வரர் திருக்கோயில்.
  2. வேப்பூர். - ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்.
  3. புதுப்பாடி. - ஸ்ரீ பரத்வாஜீஸ்வரர் திருக்கோயில்.
  4. குடிமல்லூர். - ஸ்ரீ அந்திரீஸ்வரர் திருக்கோயில்.
  5. வன்னிவேடு. - ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்.
  6. காரை. - ஸ்ரீ கெளதமேஸ்வரர் திருக்கோயில்.
  7. அவரைக்கரை. - ஸ்ரீ காஷ்யபேஸ்வரர் திருக்கோயில்.
நடுநாட்டுத் தலங்கள் - 22.

33/1. திருநெல்வாயில் அரத்துறை. (திருவட்டுரை).

  
 
நெல்வா யில்அரத்  துறையாய் போற்றி.
அருள்மிகு ஆனந்தநாயகி உடனுறை ஆண்ந்தீஸ்வரர் திருக்கோயில். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூர் அடைந்து, தொழுதூர் - விருத்தாசலம் சாலையில் 20. கி.மீ பயணிக்கவேண்டும். இறைவன் ஞானசம்பந்தருக்கு, முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், சின்னங்களும் தந்தருளிய தலம். மூவர் பாடல் பெற்றது.
34/2.பெண்ணாகடம். (பெண்ணாடம்).


 பெண்ணா கடத்துப் பெரும போற்றி.
அருள்மிகு ஆமோதனம்பாள் உடனுறை பிரளயகாளேஸ்வரர் திருக்கோயில். தோழுதூரிளிருந்து 15. கி.மீ. தேவகன்னியரும், காமதேனுவும், வெள்ளையானையும் (பெண் + ஆ + கடம்) வழிபட்ட தலம். அப்பர் சூழ, இடபக் குறி பொறிக்குமாறு இறைவனை வேண்டிப் பெற்ற தலம். களிக்கம்ப நாயனார் வீடுபேறு பெற்ற தலம். மெய்க்கண்ட நாயனாரின் அவதாரப் பதி. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
35/3. திருக்கூடலையாற்றூர்.

   
 
 கூடலை யாற்றூர்க் கோவே போற்றி.
அருள்மிகு பராசக்தி மற்றும் ஞானசக்தி உடனுறை நர்த்தனவல்லபெஸ்வரர் திருக்கோயில். சேத்தியாதோப்பு - கும்பகோணம் சாலையில் குமாரக்குடி வந்து ஸ்ரீமுஷ்ணம் சாலையில் 2 கி.மீ சென்று, காவாலகுடி அடைந்து அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம். சுந்தரர் தன முன்னே சென்ற அந்தணரை திருமுதுகுன்றத்திற்கு வழி கேட்க, அந்தணராக வந்த இறைவன், கூடலையாற்றூக்கு வழி இது என்று கூறி மறைய, சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார். சுந்தரர் பாடல் பெற்றது.
36/4. திருஎருக்கத்தம்புலியூர். (ராஜெந்திரபட்டணம்). 
 
 
 எடுக்கத்தம் புலியூர் எந்தாய் போற்றி.
37/6. திருத்தினைநகர். (தீர்த்தனகிரி).


 
 திருத்தினை நகரச் சிவனே போற்றி.
அருள்மிகு நீலாயதாட்ஷி உடனுறை சிவக்கொழுந்தீசர் திருக்கோயில். கடலூர் - சிதம்பரம் சாலையில் ஆலபாக்கத்திற்கும் புதுச்சத்திரத்ததிற்கும் இடையே வலப்புறம் பிரியும் சாலையில் 5 கி.மீ செல்ல வேண்டும். பெரியான் என்னும் பள்ளன், தன நிலைத்தை உழுது கொண்டிருக்கும்போது, இறைவன் அடியவராக வந்து உணவு கேட்க, அவன் உழுவதை நிறுத்திவிட்டு,உணவு கொண்டுவர வீடு சென்றான். அவன் உணவு எடுத்துக்கொண்டு திரும்பி வந்த பொழுது, அவன் நிலத்தில் தினை விளைந்திருப்பதைப் பார்த்து திகைக்க, இறைவன் காட்சி தந்து அருளிய தலம். அதிசயமாக தினை விளைந்ததால், தினைநகர் என்று பெயர் பெற்றது. வீரசேன மன்னனுக்கு வெண்குஷ்டம் நீங்கிய பதி. சுந்தரர் பாடல் பெற்றது.
38/6. திருச்சோபுரம். (தியாகவல்லி)
 
 சோபுரம்  மேவிய சொக்கா போற்றி.
அருள்மிகு தியாகவல்லியம்மை உடனுறை மங்களபுரீஸ்வரர் திருக்கோயில். கடலூர் - சிதம்பரம் சாலையில் ரயில்வேகேட் தாண்டி ஆலப்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் (இடப்புறம்) செல்லவேண்டும். அகத்தியர் வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
39/7. திருஅதிகை. (திருவதிகை).
 
  
 அதிகைவீ  ரட்டத் தழகா போற்றி.
அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வீரட்டேஸ்வரர் திருக்கோயில். பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ. அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச்செயல் நிகழ்ந்த இடம். ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டியருளிய தலம். அப்பர் பெருமானின் சூலைநோயை நீக்கி, திருநாவுக்கரசராய் மாற்றிய பதி. மூவர் பாடல் பெற்றது.
அட்ட வீரட்ட தலங்களாவன :
  1. திருவதிகை - திரிபுர சம்ஹாரம்.
  2. திருக்கோவலூர் - அந்தகாசுர சம்ஹாரம்.
  3. திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது 
  4. திருக்கண்டியூர் - பிரமனின் சிரசைக் கொய்தது.
  5. திருப்பறியலூர் - தக்கன் சம்ஹாரம்.
  6. திருக்கடவூர் - கால சம்ஹாரம்.
  7. திருவிற்குடி - சலந்தர சம்ஹாரம்.
  8. திருவழுவூர் - கஜ சம்ஹாரம்.    
40/8. திருநாவலூர். 

 நாவலூர் மேவிய நம்பா போற்றி.
அருள்மிகு மணோன்மணி அம்பாள் உடனுறை பத்தஜனேஸ்வரர் திருக்கோயில். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் தண்டி உளுந்தூர்பேட்டைக்கு முன் மடப்பட்டு என்ற ஊரில் இடப்புறம் பிரியும் பண்ருட்டி சாலையில் 2 கி.மீ செல்ல வேண்டும். இக்கோயிலிலுள்ள சண்டேஸ்வரர் வரலாற்றுச் சிற்பங்கள் கண்டு கழிக்கத் தக்கது. சுந்தரர் பாடல் பெற்றது.
41/9. திருமுதுகுன்றம். (விருத்தாசலம்).
  முதுகு றமர்ந்த முனிவா  போற்றி.
அருள்மிகு பெரியநாயகி உடனுறை பழமலைநாதர் (விருத்தகிரீஸ்வரர்) திருக்கோயில். விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் சாலை பிரிகிறது. விருத்தம் = பழமை. அசலம் = மலை. விருத்தாசலம் = முதுகுன்றம். விருத்த காசி என்னும் பெருமைக்குரியது. பண்டைநாட்களில் இவ்வூர் மக்கள் காசிக்கு செல்வதில்லை என்பர். பிரமனும், அகத்தியரும் வழிபட்ட பதி. சுந்தரர் இத்தலப் பெருமானை பொன் வேண்டிப் பெற்று. மனிமுத்தாரில் இட்டுத் திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக்கொண்டார் என்பர். இத்தலத்தில் இறப்பவர்கள் உயிரை, இறைவன், தன தொடைமீது கிடத்தி, மந்திர உபதேசம் செய்ய, இறைவி தன முந்தானையால், விசிறி இளைப்பாற்றுகிறாள் என்பது கந்தபுராணச் செய்தி. மூவர் பாடல் பெற்றது.
42/10. திருநெல்வெண்ணெய். (நெய்வெனை).


 நெல்வெணெய் மேவிய நிருத்தா போற்றி. 
அருள்மிகு பிருஹந்நாயகி உடனுறை சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில். உளுந்தூர்ப்பேட்டை - சேலம் சாலையில் சுமார் 2 கி.மீ தூரம் சென்று வலப்புறம் பிரியும் சாலையில் சுமார் 1 கி.மீ பயணிக்கவேண்டும். இக் கோயில் கல்வெட்டில், இறைவனை பொற்குடம் கொடுத்த நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  சம்பந்தர் பாடல் பெற்றது.
43/11. திருக்கோவலூர். ( திருக்கோயிலூர்).
கோவல்வீ  ரட்டக் கோமான் போற்றி.
அருள்மிகு சிவானந்தவல்லி உடனுறை வீரட்டேஸ்வரர் திருக்கோயில். திடுவண்ணாமலையிலிருந்து 35 கி.மீ. அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்று. அந்தகாசுரனை சம்ஹரித்த தலம். கபிலர் வடக்கிருந்து உயிவிட்ட இடம். (கபிலர் குகை). சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
44/12. அறையணிநல்லூர். (அரகண்டநல்லூர்). 

 
 அரையணி நல்லூர் அரசே போற்றி.
அருள்மிகு சௌந்தர்யகனகாம்பிகை உடனுறை அதுல்ய நாதேஸ்வரர் திருக்கோயில். திருக்கோவலூர் - விழுப்புரம் சாலையில் 1 கி.மீ. நீலகண்ட முனிவர்,கபிலர், பாண்டவர்கள் ஆகியோர் வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
45/13. இடையாறு. (டி.எடையார்).
  இடையா றிடையமர் ஈசா போற்றி.
அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோயில். திருக்கொயிலூரிளிருந்து, திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் உள்ளது. சுந்தரர் பாடல் பெற்றது.
46/14. திருவெண்ணெய்நல்லூர்.
 வெண்ணெய்நல் லூருறை மேலோய் போற்றி. 
அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில். விழுப்புரம் - திருச்சி சாலையில் அரசூர் சென்று வலப்புறமாக பிரியும் திருக்கோயிலூர் சாலையில் சென்று இத்தலத்தை அடயலாம். சுந்தரர் வாழ்ந்த பதி. சுந்தரரை, இறைவன் வழக்கிட்டு, வழிய வந்து ஆட்கொண்ட பதி. மெய்கண்டதேவர் வாழ்ந்து, உபதேசம் பெற்ற தலம். இவ்வூரில் அம்பாள் வேண்ணையால் கொட்டை கட்டி வீற்றிருப்பதாக ஐதீகம், சுந்தரர் பாடல் பெற்றது.  
47/15. திருத்துறையூர். (திருத்தளூர்).

துறையூர் அமர்ந்த தூயோய் போற்றி.
அருள்மிகு சிவலோகநாயகி  உடனுறை சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில். பண்ருட்டி - புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் சாலையில் 10 கி.மீ சென்று கரும்பூர் சாலையில் திரும்பி 5 கி.மீ பயணிக்க வேண்டும். சுந்தரர் தவநெறி வேண்டிப்பெற்ற தலம். நாரதர், அகத்தியர், வசிட்டர், வீமன், சூரியன் ஆகியோர் வழிபட்ட பதி. சுந்தரர் பாடல் பெற்றது.
48/16. வடுகூர். (ஆண்டார்கோயில்).

 வடுகூர் அடிகள் மாணடி போற்றி.
அருள்மிகு திரிபுராந்தகி உடனுறை வடுகீஸ்வரர் திருக்கோயில். விழுப்புரம் - பாண்டிச்சேரி (வழி-கோலியனூர்) சாலையில் வளவனூர் தாண்டி, புதுவை மாநில எல்லையுள் உள்ள தலம். வடுகபைரவர், முண்டகன் என்னும் அசுரனை,அழித்த பழி தீர இறைவனை வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது. 
அஷ்ட பைரவ மூர்த்தங்கள்: 
  1. அசிதாங்க பைரவர்.
  2. குரு பைரவர்.
  3.  சண்ட பைரவர்.
  4. குரோத பைரவர்.
  5. உன்மத்த பைரவர்.
  6. கபால பைரவர்.
  7. பீஷண பைரவர்.
  8. சம்ஹார பைரவர். (வடுக பைரவர்)
49/17. திருமாணிகுழி.
திருமாணி குழிவளர் தேவே போற்றி.
அருள்மிகு அம்புஜாட்சி உடனுறை வாமனபுரீஸ்வரர் திருக்கோயில். கடலூரிலிருந்து, திருவகீந்திபுரம் சென்று, சுந்தரர்பாடி என்னுமிடத்திற்கு அருகில், சாத்தன்குப்பம் சாலையில் சென்று, இத்தலத்தை அடையவேண்டும். திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு, அவனையழித்த பழி தீர இறைவனை வழிபட்ட இடமாதலின் மாணிகுழி. (மானி-பிரம்மசாரி). சம்பந்தர் பாடல் பெற்றது.
   50/16. திருப்பாதிரிப்புலியூர். (திருப்பாப்புலியூர்).
 பாதிரிப் புலியூர்ப் பரம போற்றி.
அருள்மிகு பிருஹந்நாயகி உடனுறை பாடலேஸ்வரர் திருக்கோயில். கடலூரின் ஒரு பகுதி. திருநாவுக்கரசரை, கல்லிற் பூட்டி கடலில் இட்ட போது, பதிகம் பாடி (நற்றுணையாவது நமசிவாயவே என்று முடியும் பாடல்) கரை சேர்ந்த பதி (கரைசேர்ந்த குப்பம்). சம்பந்தர் பாடல் பெற்றது.
51/19. திருமுண்டீச்சரம். (கிராமம்).

  முண்டீச் சரத்து முதல்வா போற்றி.
அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாதர் திருக்கோயில் .திருக்கொயிலூரிலிருந்து, திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தாண்டி 2 கி.மீ. இறைவனின் காவலர்களாகிய, திண்டி, முண்டி இருவரும் வழிபட்ட தலம். வீரபாண்டிய மன்னனுக்குப பொக்கணம் (திருநீற்றுப்பை) கொடுத்த தலம். அப்பர் பாடல் பெற்றது.
52/20. புறவார்பனங்காட்டூர். (பனையபுரம்).

 புறவார் பனங்காட் டூரா போற்றி.
அருள்மிகு சத்யாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில். விகிரவாண்டி - தஞ்சை சாலையில் 2 கி.மீ. சூரியன் வழிபட்ட தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
53/21. திருஆமாத்தூர். 


 திருஆ மாத்தூர்த் தேவே போற்றி.
அருள்மிகு முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் திருக்கோயில். விழுப்புரம் - செஞ்சி சாலையில் 2 கி.மீ சென்று இடப்புறம் திரும்பும் திருஆமாத்தூர் சாலையில் 6 கி.மீ செல்லவேண்டும். உயிர்களுக்கு (பசுக்களுக்கு) இறைவன் தாயாக இருந்து அருளும் தலம். நந்தி தவமிருந்து கொம்பு பெற்ற தலம். காமதேனு வழிபட்ட பதி. மூவர் பாடல் பெற்றது. 
54/22. திருவண்ணாமலை.


அண்ணா மலைஎம் அண்ணா போற்றி.
 தங்கத்தேர்.
 
 கல்யாண உற்சவம்.
அருள்மிகு அபீதகுஜாம்பாள் உடனுறை அருணாசலேஸ்வரர் திருக்கோயில். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் திருவண்ணாமலை சாலை பிரிகிறது.பஞ்ச பூத தலங்களுள் அக்னி ஷேத்ரம். நினைக்க முக்தியருளும் பதி. அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான், கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த தலம். ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். இங்கு கார்த்திகைப் பெருவிழா மிகப் பிரசித்தி. இங்கு மலையே சிவ சொரூபமாதலின் கிரி வலம் மிக சிறப்பு வாய்ந்தது.

கிரிவலம்.
இந்திர லிங்கம்.
 
 அக்னி லிங்கம்.
 
 எம லிங்கம்.
 
 நிருதி லிங்கம்.
 
 நந்தி முக தரிசனம்.
 
 சூர்யா லிங்கம்.
 
 வருண லிங்கம்.
 
 ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில்.
 
 வாயு லிங்கம்.
 
 
 குபேர லிங்கம்.
 
 பஞ்சமுக தரிசனம்.
 
 ஈசான லிங்கம்.
 தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள். (22)





பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிராத் தாண்டு பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! உன் செவ்வடி  செவ்வி திருக்காப்பு 
அடியோமோடும் நின்நோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு 
படைப்போர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
- பெரியாழ்வார்.

1. திருக்கச்சி அத்திகிரி. (காஞ்சிபுரம்).
 (43 வது திவ்யதேசம்).


 அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில். (காஞ்சிபுரம்)
பெருமாள்: ஸ்ரீ வரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான்: மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார்: பெருந்தேவி தாயார் (தனிக்கோயில்). தீர்த்தம்: வேகவதி (நதி), அனந்த சரஸ், சேஷ தீர்த்தம். வராஹ தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம், விமானம்: புண்யகோடி விமானம்.
இங்குள்ள திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் (அத்திமரத்தாலான பெருமாள்) சிலையை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே எடுத்து 10 தினங்களுக்கு பூஜை செய்வர். அப்போதுமட்டும் தரிசனம் கிடைக்கும். 
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்,பேயாழ்வார். வாரணகிரி, அத்திகிரி என்ற மாடி போன்ற மலைகளாலான இத்தலத்தில் முதல் தளத்தில் நரசிமர் (அழகிய சிங்கர்) அமர்ந்த திருக்கோலத்திலும், மேல் தளத்தில் வரதராஜப் பெருமாளும் சேவை சாதிக்கின்றனர். சித்திரா பௌர்ணமி கழிந்து 15 நாட்களுக்கு, சூரியன் மறையும்போது, சூரியகிரணங்கள், சுவாமியின் திருமுகத்தில் விழுமாறு சந்நிதி வடிவமைக்கப் பட்டுள்ளது.
இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் தூண் சிற்பங்கள் மிக அற்புதமானவை. அவற்றை கீழே கண்டு மகிழலாம்:


 2. அட்டபுயக்கரம். (காஞ்சி)
(44 வது திவ்யதேசம்)
வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து  1 1/2. கி.மீ.
பெருமாள்: ஆதிகேசவப்பெருமாள், கஜேந்திருவரதன், அஷ்ட புயக்கரத்தான். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார்: அலர்மேல்மங்கை, பத்மாஸனி, புஷ்பவல்லி. தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரணி. விமானம்: ககநாக்ருதி, சக்ராக்ருதி, வ்யோமாகர விமானம். எட்டுக்கரங்களுடன் பெருமாள் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே. மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், பேயாழ்வார்.
3. திருத்தண்கா (தூப்புல்,காஞ்சி)
(45.வது திவ்யதேசம்)


அட்டபுயக்கரத்திளிருந்து  1 கி.மீ. பெருமாள்: தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப் பிரகாசர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார்: மரகதவல்லி. தீர்த்தம்: சரஸ்வதி. விமானம்: ஸ்ரீ கரவிமானம். ஸ்ரீ சுவாமி தேசிகன் அவதாரப்பதி. மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார.
4. திடுவேளுக்கை. ( காஞ்சிபுரம்)
46 வது திவ்யதேசம்.
 
அட்டபுயக்கரத்திலிருந்து 1/2. கி.மீ.
பெருமாள்: அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன். மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். தாயார்: வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி. (தனிக்கோயில்). தீர்த்தம்: கனகஸரஸ், ஹெமசரஸ். விமானம்: கனக விமானம். மங்களாசாசனம்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார்.

5. திருநீரகம். (காஞ்சிபுரம்)
47 வது திவ்யதேசம்.
இத் திருத்தலம் எங்கிருந்தது என்று அறியமுடியவில்லை. உற்சவர் மட்டும் உலகளந்தான் (திருஊரகம்) கோவிலில் சேவை சாதிக்கிறார். 
மூலவர்: நீராகத்தான். (தற்போது இல்லை) 
உற்சவர்: ஜகதீஸ்வரப் பெருமாள். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: நிலமங்கை வள்ளி.
விமானம்: ஜகதீஸ்வர விமானம்.
தீர்த்தம்: அக்ரூர தீர்த்தம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
திருஊரகத்தில் 16 கால் மண்டபத்தில் நீராகத்தான் சன்னதி உள்ளது.

6. திருப்பாடகம். (காஞ்சிபுரம்).
48 வது திவ்யதேசம்.
பாண்டவ தூதப் பெருமாள் கோயில் - பெரிய காஞ்சிபுரம்.

பெரிய காஞ்சியில் கங்கைகொண்டான் மண்டபத்தில் உள்ளது.
மூலவர்: பாண்டவதூதர். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். 
தாயார்: ருக்மணி, சத்யபாமா.
விமானம்: பத்ர விமானம், வேத கோடி விமானம்.
தீர்த்தம்: மத்ஸய தீர்த்தம்.
மங்களாசாசனம்: திருமழிசையாழ்வார்.
மூலவர் 25 அடி உயர பிரம்மாண்டமான திருமேனி. சிறிய சன்னதி. பெரிய பெருமாள்.
7. திரு நிலாத்திங்கள் துண்டம். (காஞ்சிபுரம்).
49 வது திவ்யதேசம்.

இத் தலம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலினுள் உள்ளது.
மூலவர்: நிலாத்துண்டத்தான், சந்திரசூடப் பெருமாள். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: நேரோருவர் இல்லா வல்லி, நிலாத்திங்கள் துண்டத் தாயார்.
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி. 
விமானம்: புருஷ ஷூக்த விமானம். (ஆர்யா விமானம்).
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
8. திருஊரகம். (காஞ்சிபுரம்).
50 வது திவ்யதேசம்.
உலகளந்த பெருமாள் திருக்கோயில்.
மூலவர்: உலகளந்த பெருமாள், திருவிக்ரமன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். 
உற்சவர்: பெரகத்தான்.
தீர்த்தம்: நாக தீர்த்தம்.
விமானம்: ஸார ஸ்ரீகர விமானம்.
மங்களாசாசனம்: திருமழிசையாழ்வார்,திருமங்கையாழ்வார்.
உலகளந்த பெருமாள்,மிகப் பிரம்மாண்டமான நெடிதுயர்ந்த திருமேனி. இடது கரத்தில்  இரண்டு  விரலையும், வலது கரத்தில் ஒரு விரலையும், உயர்த்திக்காட்டி அமைந்துள்ள கோலம் வெகு அழகு.இங்குள்ள ஆதிசேடன் சன்னதி மிக விசேஷம். 
இத்திவ்ய தேசத்திற்குள்ளேயே நீரகம்,காரகம், கார்வண்ணம் ஆகிய மூன்று திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. 
          
9. திருவேஹ்கா. (காஞ்சிபுரம்).
51 வது திவ்யதேசம்.
காஞ்சியில் அட்டபுயக்கர பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ளது.
மூலவர்: யாதொத்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமாள். மேற்கு நோக்கிய சயனத்திருக்கோலம்..
தாயார்: கோமளவல்லி நாச்சியார்.
தீர்த்தம்: பொய்கை புஷ்கரணி.
விமானம்: வேதாஸார விமானம்.
மங்களாசாசனம்: பேயாழ்வார், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்.
பொய்கையாழ்வார் அவதாரத்தலம்.
10.திருக்காரகம். (காஞ்சிபுரம்).
52 வது திவ்யதேசம்.
திரு உலகளந்த பெருமாள் கோயில் உள்ளேயே அமைந்துள்ளது.
மூலவர்: கருணாகரப் பெருமாள். வடக்கு நோக்கி ஆதிசேடன் மீது அமர்ந்த திருக்கோலம். 
தாயார்: பத்மாமணி நாச்சியார், ராமாமணி naassiyaar 
தீர்த்தம்: அக்ராய தீர்த்தம்.
விமானம்: வாமன விமானம், ரம்ய விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
11 திருக்கார் வானம். (காஞ்சிபுரம்).
53 வது திவ்யதேசம்.
திரு உலகளந்த பெருமாள் கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது.
மூலவர்: கள்வர். வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: கமலவல்லி, தாமரையாள்.
தீர்த்தம்: கௌரி தீர்த்தம்,தராதர தீர்த்தம்.
விமானம்: புஷ்கல விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
12 . திருக்கள்வனூர். (காஞ்சிபுரம்).
54 வது திவ்யதேசம்.

அருள்மிகு காமாட்சி அம்மன் திருகோயில் குளத்தினருகே உள்ளது.
மூலவர்: ஆதிவராஹப்பெருமால், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: அஞ்சிலைவல்லி நாச்சியார்.
தீர்த்தம்: நித்ய புஷ்கரணி.
விமானம்: வாமன விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
13. திருப்பவள வண்ணம். (காஞ்சிபுரம்)
55 வது திவ்யதேசம்.

பெரிய  காஞ்சிபுரத்தில், காலாண்டார் தெருவில் உள்ளது.
மூலவர்: பவள வண்ணர், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: பவளவல்லி, தனிக்கோயில்.
தீர்த்தம்: சக்ர தீர்த்தம்.
விமானம்: ப்ரவாள விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.


எதிரே பச்சை வன்னனாதர் திருக்கோயில்.
14. திருப்பரமேச்சுர விண்ணகரம். (காஞ்சிபுரம்).
56  வது திவ்யதேசம்.
 
காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே 1/2. கி.மீ.
மூலவர்: பரமபதநாதன். மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்: வைகுந்த வல்லி.
தீர்த்தம்: ஜாம்மத தீர்த்தம்.
விமானம்: முகுந்த விமானம்,
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
இத் த்ஜலத்தின் கருவறை,அதைச்சுற்றியுள்ள பிரகாரம் (தூண்கள் உட்பட) ஒரே பாறையில் குடையப்பட்ட பல்லவர் பாணி குடவறைக்கோயில். பல்லவ மன்னன் பரமேச்வரவர்மனால் கட்டப்பட்ட இக் கோயிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளன.
15. திருப்புட்குழி.
57 வது திவ்யதேசம்.


சென்னை - வேலூர் சாலையில் பாலுசெட்டி சத்திரத்தின் அருகே உள்ள தலம்.
மூலவர்: விஜயராகவப் பெருமாள். நான்கு புஜங்களுடன் கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்: மரகதவல்லி. தனிக்கோயில்.
தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம்.
விமானம்: விஜயகோடி விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸமஸகாரம் செய்யும் பாவனையில் அமர்ந்த திருக்கோலம். இராமானுஜர் யாதவப் பிரகாசரிடம் அத்வைத பாடம் படித்த தலம்.
58. திருநின்றவூர்.
58 வது திவ்யதேசம்.
சென்னை - திருவள்ளூர் (பூந்தமல்லி வழி) சாலையில் உள்ளது.
மூலவர்: பக்தவத்சல பெருமாள், பத்தராவிப் பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்: என்னைப்பெற்ற தாயார்,சுதாவல்லி.
தீர்த்தம்: வருண புஷ்கரணி.
விமானம்: உட்பல விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
திருமகள் வந்து தனித்து நின்ற இடம்- திருநின்றவூர்.
17. திருவள்ளூர். (திரு எவ்வுள்).
59 வது திவ்யதேசம்.

மூலவர்: வீரராகவப் பெருமாள்,புஜங்கசயனம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.
உற்சவர்: வீரராகவப் பெருமாள்.
தாயார்: கனகவல்லி (வஸுமதி தேவி)
தீர்த்தம்: ஹ்ருத்தபாப நாசினி.
விமானம்: விஜயகோடி விமானம்.
மங்களாசாசனம்: திருமழிசையாழ்வார்,திருமங்கையாழ்வார்.
இத் தளத்தில் செய்யும் புண்ணியம் பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால், இத் தளத்திற்கு புன்னியாவார்த்த ஷேத்திரம் என்று பெயர்.
19. திருவல்லிக்கேணி. (சென்னை)
60 வது திவ்யதேசம்.




மூலவர்: வேங்கடகிருஷ்ணன். ருக்மணி பிராட்டி மற்றும் பலராமன், ஸாத்யாகி, அநிருத்தன், பிரத்யும்னன் ஆகியோரோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்: பார்த்தசாரதி.
தாயார்: வேதவல்லி.
தீர்த்தம்:: கைரவினி (அல்லிக்கேணி).
விமானம்: ஆனந்த விமானம், பிரணவ விமானம்,புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம்.
மங்களாசாசனம்: பேயாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்.
ஐந்து மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளியுள்ள தலம். வைனவத்தலங்க்களுள் சிறப்புற்ற, வேங்கடம்,அரங்கம், கச்சி என்ற முத்தலப் பெருமாள்களும் இங்கு கோயில் கொண்டிருப்பது விசேடம். பெரிய மீசையுடன் பெருமாளை இங்குமட்டுமே தரிசிக்கலாம்.
20. திருநீர்மலை.
61 வது திவ்யதேசம்.





சென்னை, பல்லாவரத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது.
இங்கு மலையடிவாரத்திலும்,,மலைமீதுமாக இரண்டு கோயில்கள் உள்ளன.
1) மலையடிவாரக்கோயில்:
மூலவர்: நீர்வண்ணன், நீலமுகில் வண்ணன்.கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். 
தாயார்: அணிமாமலர் மங்கை. தனிக்கோயில்.
மலைக்கோயில்:
மூலவர்: 1) சாந்த நரசிம்மன்.அமர்ந்த திருக்கோலம். 2) ரங்கநாதன். சயன திருக்கோலம். 3) திருவிக்ரமன்.நடந்த மற்றும் நின்ற திருக்கோலம்.
தீர்த்தம்: மணிகர்ணிகா தடாகம்,\, சீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி,  ஸவர்ண புஷ்கரணி.
விமானம்: தொயகிரி விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்.
நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என்ற நான்கு திருக்கோல தரிசனம்.
பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின் வைகுண்டத்த்ற்கு திரும்பும் காட்சி இங்கு சேவையாகிறது:
அமர்ந்த நிலையில் நரசிம்மராக, நின்ற நிலையில் நீர்வண்ணராக, சயன நிலையில் ரெங்கநாதனாக, நடந்த நிலையில் உலகளந்த திரிவிக்ரமனாக தரிசிக்கிறோம்.
20. திருவிடவெந்தை. (திருவடந்தை).
62 வது திவ்யதேசம்.


சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில், கோவளத்திற்கு அடுத்து உள்ளது.
மூலவர்: லக்ஷ்மி வராகப்பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்:  நித்ய கல்யாணப் பெருமாள்.
தாயார்: கோமளவல்லி நாச்சியார். தனிக் கோயில்.
தீர்த்தம்: வராஹ தீர்த்தம். கல்யாண தீர்த்தம்.
விமானம்: கல்யாண விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
நித்ய கல்யாணபுரி, வராஹபுரி என்பவை இத்தளத்தின் வேறு பெயர்கள். தினமும் ஒரு திருமணம் செய்துகொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள்.என்று பெயர். திருமண பிரார்த்தனைத் தலம்.
21) திருக்கடன் மலை. (மாமல்லபுரம்).
63 வது திவ்யதேசம்.



சென்னையிலிருந்து 55 கி.மீ தூரத்திலுள்ள இத் தலம் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 
மூலவர்: ஸ்தல சயனப் பெருமாள். புஜங்க சயனம். கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
உற்சவர்: உலகுய்ய நின்றான்.
தாயார்: நிலமங்கைத் தாயார். தனிக்கோயில்.
தீர்த்தம்: புண்டரீக புஷ்கரணி, கருட நதி.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
பண்டைய பல்லவர் தலைநகரமாக விளங்கிய இத் தல சிர்ற்பங்கள் கண்டு மகிழத்  
தக்கவை. கீழே........
























                                            
22. சொலசிம்மபுரம் என்னும் திருக்கடிகை. (சோளிங்கர்)
64 வது திவ்யதேசம்.


  

அரக்கோணத்திலிருந்து 25 கி.மீ.
மூலவர்: யோக நரசிம்மர். (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே  திருமுக மண்டலம்.
உற்சவர்: பக்த்தவத்ஸல பெருமாள். (தக்கான்).
தாயார்: அம்ருதவல்லி.
தீர்த்தம்: அம்ருத தீர்த்தம்,தக்கான் குளம், பாண்டவ தீர்த்தம்.
விமானம்: ஸிம்ஹ விமானம், கோஷ்டாக்ருதி விமானம், ஹேமகொடி விமானம்.
மங்களாசாசனம்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார்.
சுமார் 500 அடி உயரமுள்ள கட்ட்காசலம் என்னும் மலை மீது நரசிம்மரும்,அருகே சற்று சிறிய மலைமீது, ஸ்ரீ ஆஞ்சநேயரும் கோயில் கொண்டுள்ளனர். ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கிரருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகவே திருக்கடிகை என்றாயிற்று.
ஸ்ரீபெரும்புதூர்.
  
சிங்கப்பெருமாள் கோயில். சென்னை - செங்கல்பட்டு சாலையில் உள்ள தலம்.
பாடலாத்திரி நரசிம்மப் பெருமாள். (திரிநேத்திரதாரி)


நடுநாட்டுத் திவ்யதேசங்கள் (2)

1. திருவயிந்திபுரம்.
41 வது திவ்யதேசம்.




கடலூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள தலம்.
மூலவர்: தெய்வநாயகன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்: மூவராகிய ஒருவன். (தேவன்).
தாயார்: வைகுண்ட நாயகி, ஹேமாமபுஜ வல்லித் தாயார்.
விமானம்: சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம்.
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்.
இக் கோயில் பெருமாளுக்கு, தாஸ ஸத்யன், அச்சுதன், ஸ்த்ரஜ்யோதிஷ், அனகஞ்சயோததிஷ், த்ரிமூர்த்தி என்றும் பெயர்களுண்டு.  இப் பெருமான், பிரமனுக்கு அடையாளமான தாமரையையும், விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு,சக்கரங்களையும்,சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு திகழ்கிறார். ஹயக்ரீவப் பெருமாள் சந்நிதி இத் திருக்கோயிலின் எதிரே ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது.
2. திருக்கோவலூர்.



கடலூரிலிருந்து திருக்கோவலூர் சாலை பிரிகிறது.
மூலவர்: திருவ்ராமன். கிழக்கு நோக்கி  நின்ற திருக்கோலம்.
உற்சவர்: ஆயன்,ஆயனார்,கோவலன் (கோபாலன்).
தாயார்: பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லித் தாயார்.
தீர்த்தம்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்.
விமானம்: சுர விமானம்.
மங்களாசாசனம்: முதலாழ்வார்கள் மூவரும் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) மற்றும் திருமங்கையாழ்வார்.
ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று முதலாழ்வார்களை ஒன்று சேர்க்கவைத்த நிகழ்ச்சி நடந்த இடம். 

முதல் பகுதி நிறைவுற்றது.
--------------------